நான் அப்படி சொல்லவே இல்லை: திமுக பிரமுகர் சரவணன்

தனியார் தேசிய தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தின்போது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என திமுக பிரமுகர் சரவணன் கூறியதை பல ஊடகவியலாளர்களே கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து சரவணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் Kashmir was never an integral part of India கூறியதாகவும் ஆனால் நெறியாளர் பேச விடாமல் Saravanan How can you say Kashmir is not a part of India என திரித்து கூறியதாகவும், எனது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்காமல் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் சரவணன் தெரிவித்தார். 

Leave a Reply