நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி விடுமுறையா?

நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி விடுமுறையா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் நாளை தேனி, திண்டுக்கல் உள்பட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து இந்த நான்கு மாவட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், மழையின் தீவிரத்தை பொருத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பது குறித்து நாளை காலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் நாளை அனைவரும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தயாராகுங்கள்

Leave a Reply

Your email address will not be published.