நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி

நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என நேற்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து தமிழகத்தில் தற்போது மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது.

இந்த 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலுக்கு வாய்ப்பு உள்ள்தாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேட்டியில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்பதால் இன்னும் 7 மாதம் வரை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

 

Leave a Reply