நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாபா ராம்தேவ் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாபா ராம்தேவ் பேட்டி

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்த தேர்தலில் பல பிரபலங்களின் ஆதரவை பெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.

அந்த வகையில் நாடு முழுவதும் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள பாபா ராம்தேவ் ஆதரவை பாஜக பெற்றுள்ளதாகவும், அவர் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பிரசாரம் செய்யப் போவதில்லை என்றும், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு கடும் போட்டி உள்ளது என்றும் யோகாகுரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply