நாசிக் நோட்டு அச்சகத்தில் திருட்டா? திடுக்கிடும் தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நோட்டு அச்சகத்தில் பணம் திருடு போய் இருப்பதாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற இடத்தில் இந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகம் உள்ளது. இங்கு பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதன் காரணமாக இங்கிருந்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்து செல்வது என்பது சாத்தியமே இல்லை

அதேபோல் வெளியாட்கள் உள்ளே வந்து விட முடியாது. இந்த நிலையில் ரூபாய் 5 லட்சம் திடீரென மாயமாகி இருப்பது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணத்தை திருடி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது