நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன்: என்ன ஆச்சு குமரி அனந்தனுக்கு?

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன்: என்ன ஆச்சு குமரி அனந்தனுக்கு?

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் குமரி அனந்தன் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு தராதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுவார் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார், கன்னியாகுமரி எம்பியாகிவிட்டதால் அவரது சகோதரர் குமரி அனந்தன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. குமரி அனந்தன் தான் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.