நாகேஷுக்கு வாய்ப்பு வாங்கி தந்த காமெடி நடிகர் காலமானார்.

நாகேஷுக்கு வாய்ப்பு வாங்கி தந்த காமெடி நடிகர் காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார். அவருக்குவ் வயது 82

சுமார் 50 ஆண்டுகளில் 600க்கும் அதிகமான படங்களில் நடித்த டைப்பிஸ்ட் கோபு கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த டைப்பிஸ்ட் கோபு, தனது நண்பர் நாகேஷுடன் சேர்ந்து நாடகங்களில் நடித்தவர். நிறைய நாடகங்களில் டைப்பிஸ்ட் வேடத்தில் நடித்ததால், டைப்பிஸ்ட் கோபு என்று அழைக்கப்பட்டார். மேலும் நாகேஷுக்கு திரையுலகில் வாய்ப்பு வாங்கி தந்தவரே இவர்தன்

கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான நாணல் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான டைப்பிஸ்ட் கோபு, தொடர்ந்து எம்ஜிஅர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர்க்ளுடன் பல படங்களிலும் நடித்தவர்.

Leave a Reply