நவீனின் ‘அலாவுதினின் அற்புத கேமிரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நவீனின் ‘அலாவுதினின் அற்புத கேமிரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓவியா நடித்த ‘மூடர் கூடம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் அடுத்ததாக இயக்கி வந்த படம் ‘அலாவுதினின் அற்புத கேமிரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன் இயக்கி நடிக்கும் இந்த படத்தில் ‘கயல்’ ஆனந்தி, ‘நந்தகோபால், குபேரன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தியாவின் முதல் 4K தொழில்நுட்பத்தில் உருவாகிய இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

மேலும் இயக்குனர் நவீன் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட் பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply