நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓபிஎஸ் அறிவிப்பு

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, காமராஜரின் அமைச்சரையில் அமைச்சராக இருந்த கக்கன் அவர்களின் வாரிசு ஆகியோர்கள் அரசு அளித்திருந்த வீட்டில் இருந்து காலி செய்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் மாற்று வீடு வழக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு மற்றும் கக்கனின் பேரன் இருந்த வீட்டு வசதி வாரிய வீடுகள் புனரமைக்கப்பட உள்ளதால், அவர்கள் இருவரும் வீடுகளை காலி செய்ய சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை பெற்றவுடன் எவ்வித மறுப்பும் இன்றி, மாற்று வீடு கூட கேட்காமல் இருவரும் தங்களுடைய வீட்டை காலி செய்தனர். இந்த செய்தி ஊடகங்களில் பரவியதை அடுத்து தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இருவரின் குடும்பத்தினர்களுக்கும் மாற்று வீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், நல்லகண்ணுவை போனில் தொடர்பு கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ், நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றும், காலி செய்துள்ள வீட்டிற்குப் பதிலாக மாற்று வீடு தேர்தல் விதிமுறைகள் தளர்ந்த பின்னர் வழங்கப்படும் என்றும், இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார். எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply