நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்

நடிகை நயன்தாரா மலையாள நடிகர் நிவின் பாலியுடன் நடித்து வரும் திரைப்படம் ‘லவ் ஆக்சன் டிராமா.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீஸர் நாளை அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், ஷான் ரஹ்மான் இசையில் ஜாமோன் ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply