நன்றி மறந்த தமிழர்கள் யார்? பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம்

நன்றி மறந்த தமிழர்கள் யார்? பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி கூறியுள்ளதாகவும், தமிழ் மீது உண்மையிலேயே பற்று கொண்டவர்கள் இதை கொண்டாடி இருக்க வேண்டாமா எனவும் வினவினார். மேலும் கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்றும், நன்றி மறந்தவன் தமிழன் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

இந்த நிலையில் இன்று தனது கருத்துக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் மொழியை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளையே நன்றி கெட்ட தமிழர்கள் என்று தான் கூறியதாகவும், ஒட்டுமொத்த தமிழர்களை தான் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply