நன்கொடை வழங்கியதால் முதலிடத்தை இழந்த பில்கேட்ஸ்

நன்கொடை வழங்கியதால் முதலிடத்தை இழந்த பில்கேட்ஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். முதலிடத்தில் அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவர் தற்போது உள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ப்ளூம்பெர்க் என்ற நிறுவனம் அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவரை அடுத்து பிரான்ஸ் நாட்டின் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. மூன்றாவது இடத்தில் தான் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் உள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர். பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.