நடிகையிடம் 70 வருடங்கள் கால்ஷீட் கேட்ட இயக்குனர்!
ஒரு நடிகையிடம் ஒரு இயக்குனர் ஒரு மாதம் முதல் அதிகபட்சம் ஒரு வருடம் வரை கால்ஷீட் கேட்பதுதான் கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் பிரபல நடிகை ஒருவரிடம் இயக்குனர் ஒருவர் 70 வருடங்கள் கால்ஷீட் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இயக்குனர் பொன்வண்ணன் நடிகை சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை சரண்யா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பொன்வண்ணன் தன்னிடம் காதலை புரபோஸ் செய்யும் போது கூறிய வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார்
பொன்வண்ணன் சரண்யாவிடம் வந்து ’நான் ஒரு படம் இயக்கப் போகிறேன் அந்த படத்திற்காக உங்கள் கால்ஷீட் வேண்டும்’ என்று கேட்டதாகவும் அதற்கு சரண்யா, ‘எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும்’ என கேட்டபோது ’70 வருடங்கள் வேண்டும்’ என்று கூறியதாகவும் இதனை வைத்து அவர் தன்னிடம் காதலை தற்போது செய்கிறார் என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் கூறினார் சரண்யாவின் இந்த காதலர் தின பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.