நடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்!

நடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்!

‘அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் திடீரென பணப் பிரச்சினை காரணமாக அந்த படம் வெளியாகவில்லை

காலை காட்சியும் மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாலைக்காட்சி அனேகமாக ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

இந்த படத்தின் ரிலீஸுக்காக தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் அமலாபால் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது

பொதுவாக நடிகைகள் பட ரிலீஸின்போது பிரச்சனைகளில் தலையிடுவதில்லை. ஆனால் அமலாபால் இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்பதால் தனது சொந்தப் பணத்தை வைத்து இந்த படத்தின் பிரச்சினையை முடித்து உள்ளதாக தெரிகிறது

நடிகைகள் யாரும் இதுவரை எடுக்காத ரிஸ்க்கை அமலா பால் எடுத்துள்ளதற்கு திரையுலகினர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.