நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 93

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்களின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ளது.

தாயாரை இழந்து வாடும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் அவரது சகோதரர் ஒய்.ஜி.ராஜேந்திர அவர்களுக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply