நடிகர் அதர்வாவுக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்!

பிரபல தமிழ் நடிகர் அதர்வாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்

கடந்த சில நாட்களாக தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து பரிசோதனை செய்து கொண்டபோது கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும், இதனால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

மேலும் தான் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைவேன் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதர்வா தற்போது ’தள்ளி போகாதே’, ‘குருதியாட்டம்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’, ‘ருக்குமணி வண்டி வருது’ ஆகிய படங்களில் அடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே.

Leave a Reply