நடிகரின் கட்சியில் இணைந்த முன்னாள் தலைமை செயலாளர்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது மறைவிற்கு ஒருசில மாதங்களிலும் தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்தவர் ராம் மோகன் ராவ். ஆந்திராவை சேர்ந்த் இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அரசியலில் குதித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடத்தி வரும் ஜன சேனா கட்சி என்ற அரசியல் கட்சியில் நேற்று ராம்மோகன் ராவ் முறைப்படி இணைந்து கட்சியின் உறுப்பினர் ஆகியுள்ளார். அவருக்கு பவன்கல்யாண், கட்சியின் அரசியல் ஆலோசகர் பதவியை கொடுத்துள்ளார்.
வரும் பாராளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பவன்கல்யாண் கட்சிக்கு ஆலோசனை கூறுவது மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலில் ராம் மோகன் ராவ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.