நடனம் தான் எனக்கு ஒழுக்கத்தை கத்துக் கொடுத்தது – நடிகை சாய் பல்லவி

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் ‘கார்கி’. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

‘கார்கி’ படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. ‘கார்கி’ திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இந்த படத்தின் நடிகை சாய் பல்லவி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கார்கி படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். “சூர்யா சார், கார்கி படத்தை வெளியிடுவது படத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். அவர் இந்த படத்தை பார்த்து இதெல்லாம் பிடித்திருக்கிறது என்று கூறும்போது சரியாக தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. நடனம் எனக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது. நடனம் இல்லை என்றால் நான் இல்லை” என்று கூறினார்.