நக்கீரன் கோபால் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்தில் ஆஜர்

சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் சற்றுமுன் ஆஜரானார். அவரிடம் விசாரணை நட்நது வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பொள்ளாச்சி பாலியல் நிகழ்வு குறித்த புகைப்படங்களை நக்கீரன் நாளிதழில் வெளியிட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி ஏற்கனவே நக்கீரன் கோபாலுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அவர் ஆஜராக வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆஜர் ஆனார். 2 முறை சம்மன் அனுப்பியதன் பேரில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply