shadow

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் பாண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பாண்டுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

பாண்டுவின் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த நடிகர் பாண்டுவுக்கு 74 வயது என்பதும் அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply