தோல்வியடைந்தாலும் தோனி பக்கம்தான்: ரசிகர்கள் கருத்து

நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் மெதுவான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது

இதற்கு ஒருசில நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் தோனியின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்த ஒருவர் 5வது வீரராக களம் இறங்கி கடைசி வரை களத்தில் நின்று முடிந்தவரை தன்னால் போராடினார்

மேலும் துபாயின் வெப்ப நிலையும் மிக அதிகமாக இருந்ததால் அவருடைய வயதுக்கு அது இடைஞ்சலாக இருந்தது இருப்பினும் தன்னால் முடிந்தவரை போராடிய தோனியின் பக்கம்தான் நாங்கள் இருப்போம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

தற்போது நான்கு போட்டிகள் தான் முடிந்துள்ளது இன்னும் பல போட்டிகள் இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தைரியமாக இருக்கலாம் என்றும் அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.