தோனி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம்

தோனி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் வடக்கு காஷ்மீர் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் டோனி விளையாடினார். பின்னர் ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசளித்தார்.

இந்திய ராணுவ சீருடையில் டோனி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசளித்தபோது திடீரென பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம் எழுந்தது. இதனால் நிகழ்ச்சியின் இடையே சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் கோஷமிட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் நிகழ்ச்சி மீண்டும் தொடர்ந்தது.

இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாக சுமூகமாக இல்லாமல் இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply