தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்கு வெற்றியும் இல்லையா?

தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்கு வெற்றியும் இல்லையா?

நேற்றைய போட்டியில் தல தோனி இல்லாத குறை வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. வெற்றி தோல்வி ஒரு அணிக்கு சகஜம் என்றாலும் குறைந்தபட்சம் போராட்ட குணம் கூட இல்லாமல் சிஎஸ்கே வீரர்கள் சொதப்பியது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருந்தது

156 ரன்கள் இலக்கு என்பது டி20 போட்டியில் ஒரு பெரிய இலக்கே அல்ல. ஆனால் முரளி விஜய் தவிர எந்த பேட்ஸ்மேன்களும் நேற்று பொறுப்புடன் விளையாடவில்லை. 15 ஓவர்கள் வரை விக்கெட்டை காப்பாற்றி சிங்கிள் எடுக்கும் தோனியின் யுக்தியை ஒருவர் கூட பின்பற்றவில்லை. சிஎஸ்கே அணியின் எட்டு பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட்டல் அவுட்டாகியதால் நேற்றைய போட்டியில் அந்த அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

மும்பை அணி: 155/4 20 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 67
லீவிஸ்: 32
ஹர்திக் பாண்ட்யா: 23

சிஎஸ்கே அணி: 109/10 17.4 ஓவர்கள்

முரளிவிஜய்: 38
சாண்ட்னர்: 22
பிராவோ: 20

ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா

இன்றைய போட்டி: ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத்

Leave a Reply

Your email address will not be published.