தோனி இன்னும் சிஎஸ்கே அணியில் எவ்வளவு நாள் இருப்பார்?

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தவில்லை என ஆங்காங்கே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தோனியின் ஒப்பந்தம் இன்னும் ஒரு வருடத்தில் முடிய உள்ளதாகவும் அந்த ஒரு வருடம் வரை அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இதிலிருந்து தோனி ஒரு வருடத்திற்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகி விடுவாரா? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே ராஞ்சி என்ற புதிய அணி ஐபிஎல் தொடரில் இணையவுள்ள நிலையில் தோனி தனது சொந்த ஊரின் அணிக்கு செல்வாரா? அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply