தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம்: பாஜகவினர்களுக்கு தமிழிசை உத்தரவு

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம்: பாஜகவினர்களுக்கு தமிழிசை உத்தரவு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்றுமுன் தனது டுவிட்டரில், ‘சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளளயும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்து செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ‘சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இனிமேல் பாஜகவினர் இல்லாமல்தான் தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply