தேவ்’ படத்தின் படுதோல்விக்கு யார் காரணம்?

தேவ்’ படத்தின் படுதோல்விக்கு யார் காரணம்?

நடிகர் கார்த்தியின் தனது திரையுலக வாழ்வில் ‘தேவ்’ போன்ற ஒரு படத்தின் தோல்வியை வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டார். இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை தான் விரும்பியபடி இயக்க முடியவில்லை என்றும் கார்த்தியின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், இயக்குனர் ரஜத் தரப்பினர் கூறியுள்ளனர். தேவ் படத்தில் கார்த்தியின் இயக்கம், எடிட்டிங் , மற்றும் மிக்சிங் உள்பட அனைத்து துறையிலும் இருந்ததாகவும், இதனால் படம் தனது விருப்பத்தை மீறி வளர்ந்ததாகவும் ரஜத் கூறியுள்ளாராம்

மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்ததால் அவரது தலையீட்டை தான் பெரிதாக கருதவில்லை என்றும் ஆனால் படம் முடிந்து போட்டு பார்த்தபோதே இந்த படம் தோல்வி அடையும் என தான் முடிவு செய்துவிட்டதாகவும் படக்குழுவினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply