தேர்தல் நேரத்தில் அஜித்துடன் மோத விரும்பாத ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் நடித்துவரும் திரைப்படங்களான தலைவர் 168 மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த இரண்டு படங்களும் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரஜினிகாந்தின் தலைவர் 168 திரைப்படம் முன்கூட்டியே அதாவது ஆயுதபூஜைக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் வலிமை படத்தின் ரிலிஸில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திட்டமிட்டபடி தீபாவளி அன்றே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அஜித்துடன் மோதலை தவிர்க்கவே ரஜினி இந்த முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply