தேர்தல் அறிக்கைதான் ஹீரோ, மோடி வில்லன்: சினிமா பாணியில் பிரச்சாரம் செய்யும் உதயநிதி

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவை பொருத்தவரை உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறார். கட்சிக்காரர்கள் ஸ்டாலினை அடுத்து உதயநிதிக்கு மரியாதை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி, ‘தேர்தல் என்ற சினிமாவில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என்றும், மோடி தான் வில்லன் என்றும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இந்த படத்தின் காமெடியன்கள் என்றும் சினிமா பாணியில் பிரச்சாரம் செய்தார். மேலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் வில்லனின் அடியாட்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

உதயநிதியின் இந்த பிரச்சார பாணியை திமுகவினர் ரசித்தாலும், நடுநிலையாளர்கள் இது தரம் தாழ்ந்த பிரச்சாரம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply