தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் !!

election

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அம்மாபேட்டை பேரூராட்சியில் 2ஆவது வார்டில் திமுக சார்பில் சித்து ரெட்டி போட்டியிட்டார். இந்த நிலையில் சித்து ரெட்டி, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சியில் 3ஆவது வார்டில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ஐயப்பன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, வேட்பாளர்கள் உயிரிழந்ததையடுத்து 2 வார்டுக்கான வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி ரத்து செய்துள்ளார். இந்த தொகுதிகளில் விரைவில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.