தேர்தலை நிறுத்தியதால் காசெல்லாம் போச்சு: விஷால் மனுதாக்கல்

தேர்தலை நிறுத்தியதால் காசெல்லாம் போச்சு: விஷால் மனுதாக்கல்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தியதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ‘நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கையில் பதிவாளர் தலையிட அதிகாரம் இல்லை என்றும் என்றும், டிகர் சங்க தேர்தலை நிறுத்திய பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை விஷால் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக பதிவாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் விஷால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் தமிழக அரசு தலையிடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply