தேர்தலே இல்லாமல் திமுக வேட்பாளர் வெற்றி!

தமிழகத்தில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலியாக உள்ளது என்பதும் அவற்றில் ஒரு பதவிக்கு மட்டும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா அவர்கள் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

எனவே திமுக வேட்பாளர் எம் அப்துல்லா தேர்தலே இன்றி வெற்றி பெற்றுவிட்டார். ஏற்கனவே ராஜ்யசபாவில் திமுக 7 எம்பிக்கள் இருக்கும் நிலையில் தற்போது அது 8ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.