shadow

தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளர் முடிவு: இந்திய கம்யூனிஸ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி தான் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று முழங்கிய நிலையில் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தலுக்கு பின்னரே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்கு முன்னரே முடிவு செய்யப்படும் என்றும், நாடாளுமன்றதேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனநாயக இயக்கங்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாஜகவிலும் பிரதமர் வேட்பாளராக மோடியை தவிர வேறொருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற குரல் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *