தேர்தலின்போது பணம் பறிமுதல்: தமிழகத்திற்கு முதலிடம்

தேர்தலின்போது பணம் பறிமுதல்: தமிழகத்திற்கு முதலிடம்

பாராளுமன்ற தேர்தலின் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நாடுமுழுவதும் தேர்தலையொட்டி நடந்த சோதனையில் இதுவரை ரூ.3439.38 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நடந்த பறக்கும் படை சோதனையில் பணம் மட்டும் ரூ.227.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply