தேனீயை தேனீக்கள் மொய்க்கத்தானே செய்யும்: பதவி இழந்த அமைச்சர் மணிகண்டன்

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன், மீண்டும் அமைச்சரவையில் இணைய தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆனால் முதல்வர் அதற்கு பிடிகொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பதவி கிடைக்காவிட்டால் அவர் திமுகவுக்கோ அல்லது அமமுகவுக்கோ செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நான் இன்னமும் சென்னையில்தான் இருக்கேன். தலைமையின் பதிலுக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கிறேன். நான் தி.மு.க.வுக்கு போகப்போறேன், அ.ம.மு.க.விலிருந்து என்னை அழைக்கிறாங்கன்னெல்லாம் பேசிக்கிறாங்க. நான் தேன் பாஸ். தேனிக்கள் தேடி வந்து மொய்க்கத்தானே செய்யும். மக்கள் செல்வாக்கு இருக்கிற என்னை பல கட்சிக்காரங்களும் அப்ரோச் பண்ணத்தானே செய்வாங்க. ஆனால் நமக்குன்னு கொள்கைகள் இருக்குதே! நான் கடைசி வரைக்கும் அ.தி.மு.க.வுலதான் இருப்பேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply