தேசிய வரைவு கல்விக்கொள்கை: கருத்து தெரிவிக்க அவகாசம் நீடிப்பு

மத்திய அரசு சமீபத்தில் தேசிய கல்வி வரைவு கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கல்விக்கொள்கைக்கு சூர்யா உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாக இருந்தது

இந்த நிலையில் தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடைய இருந்த சூழலில், கூடுதலாக 15 நாட்கள் வழங்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

Leave a Reply