தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்: கமல்ஹாசன் டுவிட்

இன்று தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இருந்து ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடரலாகாது.

இந்த டுவிட்டுக்கு பல்வேறு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. கமல்ஹாசன் ட்வீட் போட்ட பின்னர் தான் பலருக்கு இன்று தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் என்பது தெரிய வருகிறது என்றும் எந்த ஒரு அரசியல்வாதியும் இதுவரை இந்த தினம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் கமல் தெரிவித்துள்ளதில் இருந்தே அவர்கள் மீது எந்த அளவுக்கு பாசமாக இருக்கிறார் என்று தெரிகிறது என்றும் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றன

Leave a Reply