தேசிய அளவில் தர்ணா போராட்டம்: பாஜக தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பு!

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது

அப்போது திரிணாமுல் கட்சியினர் வன்முறையில் இறங்கியதாகவும், மேற்குவங்க பாஜக அலுவலகம் தீயிட்டு கொளுத்தியதாகவும் வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் அராஜக செயலை கண்டித்து மே மாதம் 5ஆம் தேதி தேசிய அளவில் தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply