தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் குடிமங்கலம், குடிமங்கலத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிமங்கலம் நால் ரோட்டில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார்.

உடுமலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராஜகோபால், மடத்துக்குளம் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் முத்துச்சாமி, குடிமங்கலம் தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

கேரள மாநிலத்தைப்போல் தேங்காய் கிலோ ரூ.50 கூட்டுறவு மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் சொட்டு நீர்பாசனம் அமைத்து கொடுக்க வேண்டும்.

தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை கோவையில் அமைத்திடவேண்டும். தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சியை உருவாக்கிட வேண்டும்.

தென்னை விவசாயிகளுக்குஉரம், பூச்சிமருந்து, எந்திரங்கள் முழு மானியத்துடன் வழங்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயை ரேஷன்கடை மூலம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரத்திற்கு ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். நல்லாறு- திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டன