ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டாம் என மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் காலில் 20 தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் விழுந்த்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா என தனி மாநிலமாக பிரிக்க வரைவு மசோதா தயாராகி வருகிறது. இதற்கான ஆலோசனை மத்திய உள்துறை அமைச்சகத்தில் நேற்று நடந்தது. இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வந்து கொண்டிருந்த போது அவரை சந்தித்த தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் , அமைச்சரின் காலில் விழுந்து ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

எம்.எல்.ஏக்கள் திடீரென காலில் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெய்ராம் ரமேஷ், செய்வதறியாது திகைத்து நின்றார். பின்னர் உடனடியாக அங்கு வந்த பாதுகாப்பாளர்கள் அமைச்சரை பத்திரமாக உள்ளே அழைத்து சென்றனர். அதன்பின்னர் அங்கு வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காரை சில எம்.எல்.க்க்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply