தெலுங்கானா கவர்னர் தமிழிசையுடன் சரத்குமார்-ராதிகா சந்திப்பு

தெலுங்கானா கவர்னர் தமிழிசையுடன் சரத்குமார்-ராதிகா சந்திப்பு

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஒரு தமிழ் பெண் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக இருப்பது பெருமைக்குரியது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கு சென்ற நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகாவும் தெலுங்கானா மாநில ராஜ் பவனில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை நேரில் தெரிவித்துக் கொண்டனர்

இதுகுறித்து தெலுங்கானா மாநில ஆளுநர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு.சரத்குமார் அவர்களும் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் தெலுங்கானா ராஜ்பவனில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Leave a Reply