தெலுங்கானா கவர்னராக பதவியேற்பது எப்போது? தமிழிசை பேட்டி

தெலுங்கானா கவர்னராக பதவியேற்பது எப்போது? தமிழிசை பேட்டி

தெலுங்கானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘தெலங்கானா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு பதவியேற்கும் நாள் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழிசை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அனேகமாக செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் தனது பேட்டியில் ‘தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன் என்று தமிழிசை கூறியதுடன், அரசியல் களத்தில் இருந்து வெளியேறவில்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தார். புதுவையில் கிரண்பேடி செயல்படுவது போல் தமிழிசை செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply