தென்மேற்கு பருவமழை இன்று தொடக்கம்: இந்த ஆண்டு நல்ல மழை என தகவல்!

chennai rain 4

இந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.

தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதால் நாடு முழுவதும் நல்ல மழை பெய்யும் என்றும், இந்த ஆண்டு நாடு முழுவதும் சராசரியை விட கூடுதலாக மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் அனைத்து நிரம்பி குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.