தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கில் திடீர் திருப்பம்: கனிமொழி கோரிக்கை நிராகரிப்பு

தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கில் திடீர் திருப்பம்: கனிமொழி கோரிக்கை நிராகரிப்பு

தூத்துக்குடி மக்களவை தேர்தல் தொடர்பாக வெற்றியை எதிர்க்கும் வாக்காளர் மனுவை நிராகரிக்க கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது விசாரணை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது

தூத்துகுடி மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றி செல்லாது என்று அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை செளந்திரராஜன் வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் அவர் தெலுங்கானா மாநில கவர்னராகிவிட்டதால் அந்த வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும் இந்த வழக்கை வாக்காளர் என்ற அடிப்படையில் தான் தொடர்ந்து நடத்த விரும்புவதாக சந்தானகுமார் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கனிமொழி வைத்த கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது

எனவே இந்த வழக்கை கனிமொழி சந்தித்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply