தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சிபிஐ அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளடு. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று சிபிஐ இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்தது

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், சிசிடிவி பதிவுகளை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்

மேலும் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், கலவரத்தில் காவல் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டகாரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது

Leave a Reply