தூத்துகுடி துப்பாக்கி சூடுக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? எப்.எஇ.ஆரில் புதிய தகவல்
தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உத்தரவு இட்டது யார் என்பது குறித்த தகவல் தற்போது இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பை கருதியும் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துகுடி, துப்பாக்கி சூடு, உத்தரவு, துணை வட்டாட்சியர்கள்
Two sub taluk officers ordered for police shooting
Leave a Reply
You must be logged in to post a comment.