துரைமுருகன் வீட்டில் சோதனை முடிந்தது. 2 பைகளில் ஆவணங்களை அள்ளி சென்ற அதிகாரிகள்

துரைமுருகன் வீட்டில் சோதனை முடிந்தது. 2 பைகளில் ஆவணங்களை அள்ளி சென்ற அதிகாரிகள்

வேலூர் காட்பாடியில் துரைமுருகன் வீட்டில் 5.30 மணி நேரம் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் 2 பைகளில் பல ஆவணங்களை எடுத்துச்சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

வேலூரில் காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சேகரித்த முக்கிய ஆவணங்களை துரைமுருகன் வீட்டிலிருந்து 2 பைகளில் ஆவணங்கள் கொண்டு சென்றுள்ளனர். இந்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

முன்னதாக இந்த சோதனைக்கு துரைமுருகனின் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

 

Leave a Reply

Your email address will not be published.