துபாயில் இருந்து சுரேஷ் ரெய்னா அவசர அவசரமாக திரும்பியது ஏன்?

 அதிர்ச்சி தகவல்

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடைபெறவிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிஎஸ்கே அணியினர் துபாய் சென்றனர்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா திடீரென தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியா திரும்பியதாக செய்தி வெளியானது. மேலும் அவர் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா எதனால் அவசர அவசரமாக இந்தியா திரும்பினார் என்பதற்கான அதிர்ச்சி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழந்ததாகவும், சுரேஷ் ரெய்னாவின் தந்தை, சகோதாரி ஆஷா தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது

இதனால் தான் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply