shadow

துணிவு சிங்கிள் பாடல் லீக்: படக்குழுவினர்அதிர்ச்சி

அஜித் நடித்த துணிவு படத்தின் முதல் பாடல் ஒன்பதாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சில்லா சில்லா என்ற பாடல் தற்போது இணையதளங்களில் லீக் ஆகி இருப்பது படக்குழுவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த லீக்கான பாடலை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்துகொண்டனர் ஆலுமா டோலுமா போல் இந்த பாடல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் இந்த படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.