துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: பெரும் பரபரப்பு

துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: பெரும் பரபரப்பு

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

6 மர்ம நபர்கள் 3 இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசை பார்த்ததும் 6 பேரும் பைக்கில் வேகமாக தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக எழுந்த பிரச்சனை தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ள நிலையில் துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply