துக்ளக்கை மிரட்டி வாங்கினாரா குருமூர்த்தி? பெரும் பரபரப்பு

துக்ளக்கை மிரட்டி வாங்கினாரா குருமூர்த்தி? பெரும் பரபரப்பு

ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய சர்ச்சையே இன்னும் நீங்காதத நிலையில் தற்போது துக்ளக் பத்திரிகையை சோ குடும்பத்தினர்களிடம் இருந்து மிரட்டி குருமூர்த்தி வாங்கியதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது

சோ மறைவிற்கு பின் துக்ளக் பத்திரிகையை அவரது குடும்பத்தினரே நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் பாஜக பிரமுகர்களை வைத்து சோ குடும்பத்தினரை மிரட்டி குருமூர்த்தி வாங்கி விட்டதாகவும் அந்த வதந்தி கூறுகின்றது

இந்த வதந்தியால் துக்ளக் வாசகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க சோ குடும்பத்தினர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Leave a Reply